கோயம்புத்தூர்: முத்துமாரியம்மன் கோவில் வீதியில் குடும்பத்துடன் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் ஆறுமுகம் என்பவரின் மகன் புவனேஸ்வரன்(24) என்பவர் வசித்து வருகிறார்.
புவனேஸ்வரன் கணேஷ் குமாரின் மனைவி கலைவாணி நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது பாத்ரூமின் மேல்பகுதி வழியாக ஒருவர் மொபைல் போன் மூலம் குளிப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் புவனேஸ்வரன் வீடியோ எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது கலைவாணிக்கு தெரியவந்தது. இதையடுத்து கலைவாணி தனது கணவர் கணேஷ்குமார் இடம் இது தெரிவித்தார் .பின்னர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கலைவாணி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து புவனேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்