திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட – வேளூர் பாலத்தடியில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி ரௌடிசத்தில் ஈடுபட்ட – திருத்துறைப்பூண்டி, கீழத்தெரு, மீனாட்சி வாய்கால் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் அரவிந்த் (வயது-21). மற்றும் ரவிசங்கர் மகன் ஹரிராஜன் (வயது-20). ஆகிய இருவர் அதிரடி கைது. சிறப்பாக செயல்பட்டு ரௌடிசத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.மாரிமுத்து, உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.