கோவை: பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் ( வயது 35 ) இவர் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். இதை கிணத்துக்கடவு கிராம நிர்வாக அதிகாரி கேசவமூர்த்தி எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் ராஜேஷ் அவரது தம்பி சதீஸ் ( வயது 25 ) கடை ஊழியர் ராஜா (வயது 26) ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி கேசவமூர்த்தியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்கள். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வியாபாரி ராஜேஷ் ,ராஜா, சதீஷ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தல், கொரோனா விதிமுறைகளை மீறல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய பட்டுள்ளது.