மதுரை : மதுரை வில்லாபுரத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தங்கம் 50 இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலாக இருந்து வந்துள்ள நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார் .இவரது சாவு குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















