சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள், உத்தரவின் பேரில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் கண்காணிப்பு பணி செய்ததில் வீரகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் (18/5/2023), ஆம் தேதி மாலை 5 மணிக்கு விவசாய நிலத்தில் சுமார் 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த குமரேசன் (40), கோவில் தெரு, பெரிய புனல் வாசல், கெங்கவல்லி என்பவரை கைது செய்து சாராயம் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக (18/5/2023) ஆம் தேதி காலை முதல் whatsapp மூலமும் தனியார் செய்தி சேனல் ஒன்றிலும் மேற்படி குமரேசன் இன்று காலை புனல் வாசல் பகுதியில் சாராயம் விற்பது போன்ற ஒரு செய்தியை ஒளிபரப்பினர். சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ பதிவை இன்று காலை எடுக்கப்பட்டது போல் ஒளிபரப்பானது, காலையில் வெளியான வீடியோ பதிவில் இவ்வழக்கில் குற்றவாளி ஆன குமரேசன் சேவ் செய்த முகத்துடனும் என்று மாலை அவரை கைது செய்த போது தாடியுடனும் உள்ளார். எனவே உண்மைத் தன்மையுடன் கூடிய தகவல்களை வெளியிடும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்பதால் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை கொடுக்க விரும்புவோர் 94899 17188 என்ற எண்ணிற்கு நேரடியாகவோ அல்லது whatsapp மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் தொடர்பு கொள்பவரின் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்