கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூளகரை கிராமத்தில் நடராஐன் என்பவர் குடியிருந்து அவரது நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், விவசாய நிலத்தில் வைத்திருந்த காப்பர் ஒயர் சுமார் 6 கிலோ அளவுள்ள ஒயர் இருந்ததாகவும், அதனை 12.02.2025ஆம் தேதி காலை சுமார் 06.00 மணிக்கு நிலத்தில் யாரோ திருடி சென்று விட்டதாகவும், நடராஜன் கல்லாவி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.