திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சியில் கல்மேடு எனும் இடத்தில் சாலைகளுக்கு போடப்படும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் மற்றும் 2000 ஏக்கர் பரப்பளவில் உள்ள மெதூர் ஏரி ஆகியவை மாசு அடைவதாகவும் இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி விவசாயி வினோத் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் (பொருப்பு) மற்றும் சென்னை கிண்டி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நடமாடும் காற்று தர கண்காணிப்பு நிலையம் மூலம் அப்பகுதிக்கு வந்து காற்றில் கலந்துள்ள மாசு குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும் விவசாய நிலங்களில் படிந்துள்ள மாசு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பரிசோதனை செய்யப்பட்டு ரிசல்ட் வந்தவுடன் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு