ஈரோடு: ஈரோடு மாவட்டம் Fep 29- 2 – 2025 சென்னிமலை எக்கட்டாம்பாளையம் கிராமம் சில்லாங்காட்டு வலசை சேர்ந்தவர். ராஜா மற்றும் சேகர் இவர்கள் வன பகுதியை ஒட்டியே இவர்களது விவசாய தோட்டம் உள்ளது. இங்கு இவர்கள் விவசாயம் செய்து கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். திடிரென்று நேற்று இரவு மர்ம விலங்குகள் இவர் வளர்த்து வந்த மாட்டு கன்றை கொன்று விட்டது. அங்கு காவலுக்கு கட்டி வைத்து இருந்த நாயையும் மர்ம விலங்கு வேட்டையாடியது காலையில் அவர் வழக்கம் போல் தோட்டத்துக்கு வந்து பார்த்த போது கால்நடைகளான மாட்டு கன்று மற்றும் அவர் காவலுக்கு வளர்த்து வந்த நாய் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஊர் பொதுமக்கள் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வந்த வனத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் சென்னிமலை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் வரவழிக்கபட்டு இறந்த கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சமாக உள்ளதாக அதிகாரிகளிடம் முறையிட்டனர். மேலும் பொதுமக்கள் கூறியதாவது சிறுத்தையாக இருந்தால் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டு கோல் விடுத்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

N.செந்தில்குமார்