ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே திருப்பூர் மாவட்ட எல்லையான திட்டுப்பாறை அருகே காங்கயம் to பழனி பிரதான சாலையில் வெறிநாய் கடியால் இறந்த ஆடுகளை வைத்து பாதிக்கபட்ட விவசாயிகள் அரசு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு காங்கயம் பழனி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் (14 – 2 -25) அங்கு விரைந்து வந்த போலிசார் விவசாயிகளை கைது செய்தனர். பின்பு அங்கு அனைத்து போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :

R.கிருஷ்ணமூர்த்தி

N.செந்தில்குமார்