விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அணையேறி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்களின் வழிகாட்டுதலின்படி கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்கரனை கிராமத்தில் வசிக்கும் உடல் ஊனமுற்ற நபரான ஐயப்பன் என்பவர் தொலைபேசி வாயிலாக உதவி கேட்டதின் பேரில் அவருக்கு தேவையான அரிசி காய்கறி மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்