விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்களின் தலைமையில் இன்று மாவட்டம் முழுவதும் சிறப்பு அதிரடி வேட்டையில் மது, குட்கா, நீதிமன்றத்தால் பிடியானை பிரிக்கப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள் நன்னடத்தை பிணை சான்று மற்றும் வழக்குகளின் தலைமறைவு குற்றவாளிகள் இன்று மாவட்ட அளவில் சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1.இதில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூவர் கைது.
2. நீதிமன்றத்தில் பிறப்பிக்கப் பட்ட வாரண்ட்டுகள் 17 நபர் வாரன்ட்டில் ஆஜர் செய்யப்பட்டது.
3. நன்னடத்தை பிணை சான்று பெற 40 பேருக்கு அழைப்பு விடுத்து இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
4. ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்பது வழக்குகள் பதியப்பட்டு 10 பேர் கைது.
5. சாராய வழக்குகளில் இன்று 206 லிட்டர் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
6.பாண்டிச்சேரி மது பாட்டில்கள் மொத்தம் 983 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
7. இன்று மட்டும் குட்கா வழக்குகளில் 450 கிலோ வரை பறிமுதல் செய்து எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேற்கண்ட அனைத்தும் 12 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டையில் பதியப்பட்ட வழக்குகளும், ரவுடிகள் கைது மற்றும் குட்கா, சாராயம் வழக்குகள் பறிமுதல் செய்தும் குற்றவாளிகள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.