விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc (Agri) அவர்கள் முன்னிலையில் இன்று 13.03.2020தேதி சுகாதாரத் துறை சார்பாக கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் Dr.திரு. செந்தில்குமார் MD அவர்கள் மேற்படி கொரோனா வைரஸ் குறித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளும் கை கழுவும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.இந்த விழிப்புனர்வு மூலம் பொது மக்களின் அச்சத்தைத் தவிர்க்கும் பொருட்டு காவல்துறை சார்பாக பெரும் பங்காற்ற வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்