விழுப்புரம்: தமிழ்நாட்டில் காவல்துறையைச் சார்பாக சிறப்பாக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் ஊக்குவிக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான கலைஞர் காவல் கோப்பை மாநில அளவில் முதலிடம் பெற்றது விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம். இவ்விருதினை, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மரியசோபி மஞ்சுளா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து பொற்கரங்களுடன் பெற்றார். இந்த விருதானது மகளிர் பாதுகாப்பு, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பான சிறந்த பணிகளை அங்கீகாரம் செய்ததாகும்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















