விழுப்புரம் : விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவு படியும், மதுவிலக்கு அமல் பிரிவு துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைப்படியும் மதுவிலக்கு வேட்டைக்காக காவல் ஆய்வாளர் திருமதி.ரேணுகா தேவி உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார், திரு.வீரசேகரன் மற்றும் காவல் ஆளிநர்கள் சேர்ந்து அருணாபுரம் பெரியதச்சூர் ps.லிமிட் கிராமங்களில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் மாத்தூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த புண்ணியவதி என்பவர் கொளப்பாக்கம் ஏரிக்கரை அருகே 10 வெள்ளை நிற கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் மொத்தம் 350 லிட்டர் RS இருந்தது கண்டுபிடிக்கப் பட்டு இது சம்பந்தமாக எதிரி 1) புண்ணியவதி வ/38 க /பெ சீனிவாசன் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயத்திற்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்று 18.05.2020 நல்லாண்பிள்ளை பெற்றாள் காவல் நிலைய சரகம் பாக்கம் மலையில் உதவி ஆய்வாளர் திரு.வேலுமணி தலைமையில் காவலர்கள் சாராய_ஊறல் ரெய்டு செய்ததில் 200 லிட்டர் கொள்ளளவு சாராய ஊறல்கள் கண்டறியப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்