விழுப்புரம் : விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட கூடுதல் எஸ்பி திரு.தேவராஜ் அவர்கள் அங்கு திரண்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் உரை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழுப்புரம் முதல் திருவாமத்தூர் வரை செல்லும் சிற்றுந்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கார்த்திகேயன்