சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஒளி,ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
