பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று 01.06.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் 89 வழக்குகள் பதிவு செய்தும் அவற்றில் 87 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முக கவசம் அணியாமல் வந்த 73 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இருந்த 3 நபர்கள் என மொத்தம் 76 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.