திருநெல்வேலி :கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதனடிப்படையில் திசையன்விளை காவல்துறையினர், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியும், கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மார்க்கெட் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் திசையன்விளை காவல் ஆய்வாளர் திருமதி சாய்லெட்சுமி அவர்கள் காவல்துறையினர்கும், நிலையம் வரும் பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் பயன்கள் குறித்தும் அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கி கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.