திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், இருசக்கர ஓட்டுனர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கியும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.