மதுரை:மதுரை, கூடல்புதூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் திரு. எம். கருப்பையா அவர்கள், மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று முக்கியமான சமூகக் குற்றங்களையும், பாதுகாப்பு விதிகளையும் எடுத்துரைத்து மாணவர்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வு, மாணவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சியாக நடைபெற்று மக்களின் பாராட்டைப் பெற்றது.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆய்வாளர் திரு. எம். கருப்பையா அவர்கள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும், அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கினார். ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் கட்டுவது, சிக்னல்களை கடைப்பிடிப்பது போன்ற முக்கியமான நடைமுறைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. மாணவர்கள் வழித்தடங்களில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க காவல்துறையின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாலியல் தொல்லைகள் குறித்து மிகுந்த சிறப்பாக எடுத்துரைத்த SI கருப்பையா, மாணவிகள் தங்களுக்குத் தரப்படும் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கத் தயங்கக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். இந்த வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்களின் நன்மதிப்பை பெருக்கும் விதமாக அமைந்துள்ளன.
இது பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று உள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்