திருவாரூர்: திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி (15.03.2024) திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் திருவாரூர் பழைய பேருந்து நிலையம், கடை தெரு பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, சைபர் கிரைம் சம்மந்தமான இணையவழி குற்றங்களான Fake Website, Online Marketing Place Fake Link, OTP fraud தொடர்பாகவும், அடையாளம் தெரியாத நபரை சமூக வலைதளங்களில் நண்பர்களாக ஏற்க கூடாது என்பது குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.