கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளி வாகனங்கள் தொடர் விபத்துகளுக்கு உள்ளாகின்றன எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பளார் திரு. P.பகலவன்,.இ.கா.ப அவர்கள் உத்தரவுபிறப்பித்தார்.
அதன்படி அன்று (16.12.2022)–ந் தேதி OXALISS பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பளார் திரு. ஜவஹர்லால் தலைமையில் சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களை நேரில் அழைத்து பள்ளி குழந்தைகளின் வாகனத்தை இயக்கும் போது அரசால் அனுமதிக்கபட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்.
குறுக்கியசாலை மற்றும் வலைவுகளில் மிக கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும், சாலை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும், வாகனத்தில் Break மற்றும் இயந்திரங்களை தினந்தோறும் கவனித்தபின் வாகனங்களை இயக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதிகள் 2012-ன் படி பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பளார், மோட்டார் வாகன ஆய்வாளர், மண்டல போக்குவரத்து அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் உடனிருந்து வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.