திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, இதனையடுத்து அம்பை உட்கோட்ட பகுதிகளிலுள்ள அனைத்து வியாபாரிகள் சங்க உறுப்பினர்களை அழைத்து அம்பை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து கடைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கடைகளை திறந்து, அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்தில் கண்டிப்பாக மூட வேண்டும் என ஆலோசனை வழங்கி, முகக் கவசங்கள் மற்றும் Sanitizer ன் முக்கியத்துவம் குறித்தும், கடைகளில் கண்டிப்பாக அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்துங்கள் எனவும், அனைவரும் தங்கள் கடைகளின் முன்பாக சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.