தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா (26.07.2022), கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1000 காவல் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர்.
மேற்படி திருவிழா கொடியேற்ற விழாவில் காவல் துறையினரின் பாதுகப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் இன்று (26.07.2022) ஆய்வு செய்தார்.
அப்போது கோவில் வளாக பகுதியில், ஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறந்த முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர் திரு. அதிசியமணி, என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. பிரேமானந்தன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார், மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.