விழுப்புரம்: அகில இந்திய அளவில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டுப் போட்டி கடந்த 8 முதல் 16 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விழுப்புரம் ஆயுதப்படை முதல்நிலை காவலர் திரு.வருண் குமார் கராத்தே போட்டியில் பங்கு பெற்று மூன்றாம் இடம் பிடித்து. வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பரிசு பெற்ற காவலரை நேற்று (22.10.2025)விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.