விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.இராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று 01.10.2020 தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு விளம்பர பிரசுரத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு N.தேவநாதன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி. C.திலகவதி மற்றும் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஸ்ரீபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்