திருச்சி : திருச்சி மாநகரத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதிகோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்படி தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களில் உரிய பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 1.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், திருச்சி, 2.திருச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் அலுவலக வளாகம், மாநகர ஆயுதப்படை, திருச்சி, 3. தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை முதலாம் அணி அலுவலக வளாகம், 4.அமராவதி நுகர்வோர் கூட்டுறவு அங்காடி, திருச்சி மற்றும் 67 நபர்கள் என மொத்தம் 71 நபர்களுக்கு, நிபந்தனையுடன் கூடிய தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், அவர்களால் உரிமம் வழங்கப்பட்டது.