இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் திருமதி.சத்யா அவர்கள் 02.09.2021 அன்று வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனையிட்ட போது முத்துகுமார் என்பவர் வாகனத்தில் கஞ்சா மற்றும் பணத்தை மறைத்து வைத்திருப்பது தொியவந்தது. இதனை தொடர்ந்து எதிரியை NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.