தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (04.09.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்களின் உத்தரவுப்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. சந்திஸ் இ.கா.ப, அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம், தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சங்கர், மற்றும்காவல்துறையினர், (03.09.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் செல்வம் (48), என்பவரது மளிகை கடையில், மேற்படி செல்வம் மற்றும் மடத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த துரைராஜ் (43) ஆகிய 2 பேரும் சேர்ந்து சட்ட விரோத விற்பனைக்காக மதுபாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான செல்வன் மற்றும் துரைராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 38 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 84 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.