தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ், அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம், தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார், மற்றும் தனிப்படை காவல்துறையினர், (09.09.2022), ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அக்சார் சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த அந்தோணி முத்து மகன் செல்வின் (எ) செல்வம் (62) என்பதும் அவர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை காவல்துறையினர், குற்றவாளி, செல்வின் (எ) செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.