இராமநாதபுரம்: இராமநாதபுரம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சக்கரக்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த தயாநிதி (எ) தயா என்பவரை சோதனை செய்தபோது.
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி குற்றவாளியை ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும், அவரிடமிருந்து இருந்து 1.200 Kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.