பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் மேற்படி உதவி மையத்தினை பெண்கள் தொடர்பு கொள்ள 181 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 09.07.2021-ம் தேதி பெண்கள் உதவி மையத்திலிருந்து வரப்பட்ட புகாரை பெற்ற குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு த.கா-1647 திருமதி.சுகண்யா மற்றும் பெரம்பலூர் காவல் நிலைய மு.நி.கா-1408 திருமதி.சுமா ஆகியோர் சம்பவ இடமான நாவலூருக்கு விரைந்து சென்று ஒரு வயது குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்த கணவரிடமிருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கடந்த 10.07.21-ம் தேதி பெண்கள் உதவி மையத்திற்கு வந்த புகாரை பெற்ற அரை மணிநேரத்திற்குள் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயசித்ரா மற்றும் த.கா-184 திருமதி.பார்வதி ஆகியோர் சம்பவ இடமான பெரம்பலூர் தீரன் நகருக்கு விரைந்து சென்று அங்கு குடிபோதையில் பெற்ற மகளை அடித்த தந்தையிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
மேற்கண்ட புகார்களை பெற்று சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி த.ஜெயசித்ரா, திருமதி.பார்வதி, திருமதி.சுகண்யா மற்றும் திருமதி.சுமா ஆகியோர்களின் பணியை திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் கவணித்தும் அவர்களது பணியினை பாரட்டும் வகையில் இன்று 13.07.2021-ம் தேதி மேற்படி நபர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக மக்கள் சேவையை சிறப்பாக செய்வதற்கு உற்சாகமூட்டினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை