சென்னை : சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ககன் குமார் 32. இவர் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் தனது இருசக்கர வாகனத்தை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நிறுத்தி விட்டு ஷாப்பிங் சென்று வந்து பார்த்தபோது, தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைதார்.
பின்னர் ககன் குமார் கொடுத்த புகாரின் பேரில், D2 அண்ணாசாலை காவல் நிலையம் பொறுப்பு ஆய்வாளர் திருமதி.அம்பிகா அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.ரங்கநாதன், திரு. பால்ராஜ் மற்றும் முதல்நிலை காவலர் பாலமுருகன் ஆகியோர் அப்பகுதிகளில் உள்ள காவல்துறையின் மூன்றாவது கண் கண்காணிப்பு கேமிரா காட்சிமூலம் ஆய்வு செய்தனர். வாகனத்தை திருடியவர் ராயப்பேட்டை சபி முகமது 36 என்பது தெரியவந்தது.
உடனடியாக வாகனத்தை மீட்டு சபி முகமதுவை சிறையில் அடைத்தனர். இவனுக்கு ஏற்கனவே ஜாம்பஜாரில் ஆதாயக் கொலை வழக்கும், ராயப்பேட்டை யில் கன்னக்களவு வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருசக்கர வாகன திருட்டு வழக்கில் விரைவாக செயல்பட்டு இருசக்கர வாகனத்தை மீட்டு கொடுத்த அண்ணாசாலை காவல்துறையினருக்கு ககன் குமார் நன்றியை தெரிவித்தார்.