மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் ஒரு வார காலத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து திருடப்பட்ட நகைகள் சுமார் 47 பவுன் மற்றும் பணம் ரூபாய் 1,35,400/- மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம். கணேஷ் நகர் காவல் சரகத்திற்குட்படட்ட போஸ் நகரில் உள்ள வீட்டில் கடந்த 11.03.2022-ம் தேதி கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுமார் 48.34 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை செய்ததில் காமராஜபுரதம் 25-ம் வீதியை சேர்ந்த பெருமாள் மகன் சசிகுமார் என்பவரை பிடித்து விசாரித்தபோது சசிகுமாரும் அவரது நண்பரான அடப்பன்வயலை சேர்ந்த அப்துல்லா மகன் அஷ்ரப் அலி ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக தெரிய வருகிறது.
மேற்படி குற்றவாளிகளிடமிருந்து சுமார் 47 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூபாய் 1,35,400/- மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் திருடப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டினார்கள்.