சிவகங்கை : சிவகங்கையில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தின விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய மதுசூதன் ரெட்டி தேசிய கொடி ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய எஸ். செல்வராஜ் அவர்கள், காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள், அது உனக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய சௌந்தர்ராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய நமச்சிவாயம் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரியாதைக்குரிய மணிவண்ணன்; செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியாதைக்குரிய சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் மாவட்ட உதவி செய்தி தொடர்பு அலுவலர் மரியாதைக்குரிய ராஜ செல்வம் அவர்கள், மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் மரியாதைக்குரிய சாமிநாதன்; உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய மதுசூதன் ரெட்டி விருது வழங்கி சிறப்பித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி