மதுரை : மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலையத்திறகு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவரது புகாரின் அடிப்படையில் சிலைமான் காவல் நிலைய குற்ற எண் 257/2012, பிரிவு. 457, 380 இ.த.ச வின் படி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் கைவிரல் ரேகை நிபுணர்களால் சம்பவ இடத்தில் கைவிரல் ரேகை சேகரிக்கப்பட்டு ஆவணபடுத்தப்பட்டது. தற்சமயம், மதுரை மாவட்ட விரல் ரேகை பதிவேடு கூடத்தில் பணிபுரிந்து வரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதர அலுவலர்கள் மூலமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மென்பொருளின் (National Automated Finger Print Identification System (NAFIS)) மூலம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பழைய வழக்குகளில் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்த்த போது இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலைய குற்ற எண். 102/2022 பிரிவு 457, 380, 511 இ.த.ச. வழக்கின் குற்றவாளி சேவுகராஜ் த/பெ. திக்விஜயன் என்பவருடைய விரல் ரேகையுடன் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் திரு. மோகன், முதுகுளத்தூர் கிளைச்சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வந்த குற்றவாளி சேவுகராஜ் த/பெ.திக்விஜயன் என்பவரை கடந்த (30.01.2023), ம் தேதி இவ்வழக்கிற்காக சம்பிரதாய கைது (Formal Arrest) செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த (18.02.2023), -ம் தேதி மேற்படி குற்றவாளியிடம் விசாரணை மேற்கொள்ளவதற்காக போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து திருடபோன பொருள்களை மீட்க வேண்டி நடவடிக்கை மேற்கெள்ளபட்டு வருகிறது. இது சம்மந்தமாக சாதுரியமாக செயல்பட்டு 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்ற சம்பவத்தில் குற்றவாளியை விரல் ரேகை அடிப்படையில் உறுதிசெய்த விரல் ரேகை பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் இதர அலுவலர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
திரு.விஜயராஜ்