பழனி: தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளைமுதல் முழுஊரடங்கு அமல்படுத்தப் படவுள்ளது இந்நிலையில் பழனியில் உள்ள வியாபாரிகளுடன் காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழனி டி.எஸ்.பி சிவா பேசியதாவது :- வியாபாரிகள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். விதிகளை மீறும் வியாபாரிகள் மற்றும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். ஆலோசனக்கூட்டத்தில் காவல்துறை ஆய்வாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா