சென்னை : சென்னை விமான நிலையத்தில், பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இலங்கையில் இருந்து வந்த 2 விமானங்களில் வந்த 3 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறையில் பரிசோதனை செய்ததில், மலக்குடலில் அவர்கள் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களுக்கு எனிமா கொடுத்து தங்கத்தை வெளியே எடுத்தனர். மொத்தம் ரூ.77.24 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 705 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல விமான இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.37.58 லட்சம் மதிப்புள்ள 824 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த பார்சல்களில் மறைத்து வைத்திருந்த ரூ.22.49 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கக்கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் ரூ.1.14 கோடி மதிப்புள்ள 2 கிலோ 529 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.