திருநெல்வேலி: கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாலுமுக்கு அருகே உள்ள மெயின் ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே பள்ளங்கள் இருந்ததைக் கண்ட கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் விபத்தினை தவிர்க்கும் வகையில் காவல் ஆய்வாளர் திரு.ஜான்பிரிட்டோ அவர்கள் அறிவுரையின்படி
உதவி ஆய்வாளர் திரு.வினுகுமார் அவர்கள்,காவலர் திரு.ரமேஷ் ஆகியோர் சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்தனர். காவல்துறையினரின் இந்நற்செயலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.