மதுரை: மதுரை மாவட்டத்தில் விபத்து பகுதிகளை கண்டறிந்து அதனை தடுக்கும் பொருட்டு, ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர்,திரு. பழனிக்குமார் அவர்கள், வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலையம் மதுரை, NCC மாணவர்கள் 45 நபர்களுடன் இணைந்து, இரவில் விபத்து நடக்கும் பகுதிகள் மற்றும் அபாயகரமான வளைவுகள் ஆகிய இடங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி, விபத்துகள் ஏற்படாவண்ணம் விழிப்புணர்வு செய்தனர்.
இதில், வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலைய முதல்வர், திரு. பால்பாண்டி அவர்கள் மற்றும் NCC அலுவலர், திரு. செந்தில் அவர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்