சேலம் : சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க, கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி.D.புஸ்பராணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.G.ராமகிருஷ்ணன் ஆகியோரின் சீரிய முயற்சியில் கொண்டலாம்பட்டி பொதுமக்களின் உதவியோடு, போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய இரும்பு தடுப்பு (Steel Barricade) தயார் செய்யப்பட்டுள்ளது.
இதனை இன்று 23.06.2020 ஆம் தேதி காவல் துணை ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.P.தங்கதுரை அவர்கள், காவல் உதவி ஆணையாளர் நுண்ணறிவு பிரிவு திரு.N.பாலசுப்ரமணியன் அவர்கள்,காவல் உதவி ஆணையாளர் திரு.C.R.பூபதிராஜன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.