பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத் மற்றும் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர், NHAI குழுவினர், நெடுஞ்சாலை AE, மங்களமேடு உதவி ஆய்வாளர் திரு.ஆண்டவர் ஆகியோர்கள்.
அடங்கிய குழு இன்று 06.09.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தின் மத்தியில் செல்லும் திருச்சி to சென்னை NH-45 தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் எதனால் விபத்து ஏற்படுகிறது எனவும், அத்தகைய விபத்தினை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும், விபத்து நடக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை