திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கறை பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் நேற்று திருப்பூரில் இருந்து கொடைரோடு நோக்கி TN 39CD 5549 என்ற Indica Polt என்ற வாகனத்தை J.இன்பராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் இரு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது வாகனத்தின் முன்பகுதி இடது பக்க டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியதில் மூவருக்கும் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார்.
இதனை அறிந்த அப்பகுதியில் சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெட்டியார் சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவ ராஜா மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. டேவிட் அவர்களது குழு காவலர்கள் திரு.நாகேந்திரன் மற்றும் திரு.கார்த்திகேயன் அவர்கள் வாகன விபத்தில் இருந்த மூவருக்கும் முதல் உதவி செய்து வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா