திருச்சி : திருச்சி மாவட்டம், திருச்சி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு என்கின்ற இடத்தில், ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் விபத்திற்குள்ளான இளைஞரை மீட்டு முறையாக முதலுதவி செய்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.