சென்னை : சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உதவி காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் திரு.பிரதேஷ் அவர்கள் விருதுநகர் அருகே விபத்தில் மரணமடைந்தார். சென்னை தலைமை செயலகம் Roving Unit ல் பணியாற்றி வந்த 2016 பேட்ஜ் எஸ்ஐ திரு.பிரதீஷ் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் – மதுரை சாலையில் நத்தம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சொக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே டிப்பா் லாரி மோதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்துடன் தெரிவித்து கொள்கின்றோம். இவரது தந்தை தென்காசி மாவட்டம் சுரண்டை காநிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரதீஷ் நமது போலீஸ் நியூஸ் பிளஸ் முகநூல் பக்கத்தின் வாசகர் ஆவார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.