அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ கயர்லாபாத் காவல்நிலையத்தில் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு விழிப்புணர்வு பள்ளியை திருச்சி சரக காவல் துணைத் தலைவர் முனைவர். ஆனி விஜயா., இ.கா.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போக்குவரத்து பயிற்சி பள்ளியை திறந்து வைத்தார். மேலும் இதனை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் கூறுகையில், இப்பள்ளியின் முக்கிய நோக்கம் பள்ளி குழந்தைகள்¸ கல்லூரி மாணவ மாணவிகள் இந்த பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் அதன் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரியலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதே ஆகும்.