விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சாரம் காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . ராக்கெட் போன்ற வானவெடிகளை திறந்தவெளியில் வெடிக்க வேண்டும், வெடிகளை டின், பாட்டில் வைத்து வெடிக்ககூடாது, பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர் தயாராக வைக்க வேண்டும், வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க கூடாது தீப்புண் ஏற்படடால் தண்ணீ ஊற்ற வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஆலோசனைகளை பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் எடுத்து கூறினார்கள். நிகழ்ச்சியில் , செயல் அலுவலர் அன்பழகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சப்.இன்ஸ்பெக்டர். சேவியர், சரஸ்வதி, பாண்டியன், சங்கரேஸ்வரன். தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி