சேலம் : விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவா்களுக்கு மேட்டூர் தீயணைப்புத் துறை சாா்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேட்டூர் தீயணைப்பு காவல்துறை அதிகாரி திரு கு.பெ.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மேட்டூர் சுற்றியுள்ள பள்ளி குழந்தைகள் மற்றும் மொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தி பயிற்சியும் வழங்கினார். மேட்டூர் தீயணைப்பு நிலைய காவல்துறை திரு கு.பெ.வெங்கடேசன் தலைமை வகித்து பள்ளி, மாணவ மாணவிகள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பதை விளக்கினாா்.
பட்டாசுகளை கைகளில் வைத்துக் கொண்டு வெடிக்க கூடாது, சிறுவா், சிறுமிகள் பட்டாசுகள் வெடிக்கும்போது வீட்டில் உள்ள பெரியவா்கள் துணையுடன் வெடிக்க வேண்டும், வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது, தளா்ந்த ஆடைகளைக் கொண்டு பட்டாசுகள், மத்தாப்புகளை வெடிக்க கூடாது, பட்டாசுகளை கண்ணாடி பாட்டில்கள், தகர டப்பாக்களைக் கொண்டு மூடி வைத்து வெடிக்க கூடாது என்பன உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை விளக்கினாா்.
அத்துடன் அவசர உதவிக்கு 101 என்ற எண்ணிலும், 04298 225001 என்ற தொலைபேசி எண்ணிலும் மேட்டூர் சிட்கோ கருமலைக்கூடல் தீயணைப்புதுறை அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு தெரிவித்தாா். நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதுபோல ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பொதுமக்களுக்கு தீபாவளி விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் எடுத்துரைக்கப்பட்டது. விபத்துக்கள் இல்லாத தீபாவளி பண்டிகை வாழ்த்துக்களை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்