குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கள் ஏற்படுவதையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
01.08.2021 முதல் 31.10.2021 (3 மாதங்கள்) வரை, பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல்துறையால் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் மொத்தம் 11077 கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டன.
04.11.2021 அன்று, சாந்தோம் நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது, இது தொடர்பாக ஜே.2 அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு CR.NO.432/AM3/2021, U/s.279 IPC & 185 M/V ACT இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது, மருத்துவ அறிக்கையின்படி மதுவின் அளவு 20/100மி.கி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாக இருந்ததால், வாகனத்தின் ஓட்டுநர் போதையின் ஆதிக்கத்தில் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் விதிமீறல்களை மீறுபவர்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்தவும், சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் அடிக்கடி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, சாலை விதிகளை மீறுபவர்களின் மீது வழக்கு பதிவு செய்ய சிறப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முழுமையான விபத்தில்லா நிலையை அடைய முடியும். வாகன ஓட்டிகள் மது அருந்தாமல் வாகனங்களை ஓட்டுவதை உறுதிசெய்யும் வகையில், சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மதிப்புமிக்க மனித உயிர்களை காப்பாற்றவும் விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்கவும் சென்னை பெருநகர காவல் துறை மேற்கொண்டுள்ள பணியில் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு
வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
