கோவை: கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள இடையர் பாளையத்தில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த விபசார விடுதி நடத்தி வந்த ஜாஸ்மின் 45 தஸ்லிம் 32 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்